கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராக நல்லூர் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமன் (28). இவர் ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராமன் தான் பணிபுரியும் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு செல்போன் உள்ளிட்ட பரிசுகளை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு சம்பவ நாளில் மாணவியை ராமன் தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது மாணவிக்கு மன வேதனையை ஏற்படுத்திய நிலையில் அவர் வீட்டில் இருந்த டீசலை எடுத்து குடித்து விட்டார். உடனடியாக குடும்பத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து ராமனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.