மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி பூங்காவில் இருக்கும் தனியார் டெக்ஸ்டைல் கம்பெனி பேருந்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். மேட்டுப்பட்டியில் இரவில் நிறுத்தி வைக்கப்பட்ட பெருந்தை எடுக்க பாபு நேற்று காலை சென்றுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் இவர் ஊழியர்களை ஏற்றி வராததாலும், செல்போனை எடுக்காததாலும் நிறுவனத்தின் ஊழியர்கள் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பார்த்தனர்.

அப்போது பின்பக்க படிக்கட்டில் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பாபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. பாபுவுக்கு திருமணம் ஆகி மனைவி எட்டு வயதில் மகள் ஐந்து வயதில் மகன் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.