தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் சமீபத்தில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளிவந்து  100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சில மாணவர்கள் லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துள்ளனர். இந்நிலையில் லக்கி பாஸ்கர் படத்தை பார்த்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள் விடுதியில் இருந்து தப்பி ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது படத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த துல்கர் சல்மான் இறுதியில் செல்வந்தராக மாறும் நிலையில் அந்த காட்சிகள் மாணவர்களை கவர்ந்ததால் துல்கர் சல்மானை போன்று நாங்களும் கார் மற்றும் வீடு போன்றவைகளை வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு அவர்கள் விடுதியை விட்டு தப்பி ஓடியதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.