உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் முகேஷ் ஜெய்ஸ்வால் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலதிபர். இவருடைய சொகுசு காரின் மீது திடீரென ஒரு குரங்கு விழுந்தது. குரங்கு வந்து விழுந்த வேகத்தில் காரின் சன்ரூஃப் கண்ணாடி உடைந்தது.

இந்த கண்ணாடி உடைந்த வேகத்தில் குரங்கு காருக்குள் விழுந்த நிலையில், உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.