சேலத்தில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியே அமைய வேண்டும் என்றதே தனது நம்பிக்கை என்றும், அதற்கான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் கூறியுள்ளார். என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அரசியலில் அமைதியாக இருந்த ஓ.பி.எஸ்., தற்போது முதன்முறையாகத் திறந்தவெளியில் அதிமுகவிற்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், “பிரிந்து போன அதிமுகவினர் மீண்டும் ஒன்றிணைந்தால், வெற்றியை யாரும் தடுக்க முடியாது” என தனது ஆதரவாளர்கள் நம்புகின்றனர் என்று கூறிய அவர், சமீபத்தில் நடிகர் விஜய் கூறிய “அதிமுக வீழும்” எனும் கூற்றிற்கு பதிலடி அளிக்கவும் தவறவிடவில்லை. “அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்ந்துபோவார்கள்” எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். OPS-ன் இந்தக் கருத்துகள், எதிர்க்கட்சி அணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.