
இந்தியாவைப் பொறுத்த வரையில் ரேஷன் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. இதன் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ஆதார் கார்டு என்பது முக்கிய ஆவணமாக கருதப்படுவதால் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பலரும் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ள நிலையில் ஆதார மற்றும் ரேஷன் கார்டு இணைப்பு மூலம் போலி ரேஷன் கார்டுகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு தெரிவித்தது. அதனால் இதுவரை ரேஷன் மற்றும் ஆதார் கார்டை இணைக்காதவர்கள் உடனே அதனை முடித்து விட வேண்டும்.
இதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டு மற்றும் ஆதாரை அருகில் உள்ள ரேஷன் கடை அல்லது இ சேவை மையத்தில் இணைக்கலாம். ஆதார் மற்றும் ரேஷன் கார்டுடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க முடியும். அதுவே ஆன்லைனில் இணைக்க நீங்கள் மாநில பொது விநியோக அமைப்பு போர்ட்டலுக்கு சென்று இணைக்கலாம். ரேஷன் கார்டு, ஆதார் அட்டை எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண் ஆகியவற்றை பதிவு செய்து சமர்ப்பிக்கலாம். அடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி நம்பரை உள்ளிட்ட பிறகு ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டு விடும். மேலும் ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் இறுதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.