
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதள பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டது. தற்போது அதில் ஹிந்தி மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா கூறியதாவது, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியை சேர்க்க இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்திய வானிலை மைய அதிகாரிகள் அறிவுறுத்தலால் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியில் முன்னறிவிப்பு வெளியிட சென்னை மையத்தில் மொழி பெயர்ப்பாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கேரளாவில் ஆங்கிலத்திலும், ஆந்திராவில் ஆங்கிலம் மற்றும் தெலுங்கிலும் மட்டுமே வானிலை மைய அறிக்கை வெளியிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.