சென்னையிலிருந்து நெல்லைக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இடையே ஒரு ரயிலும் என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் மூன்றாவது ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. அதாவது காலை 6:00 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2 முதல் 2.30 மணிக்குள் சென்னை வந்து சேரும் என்றும், பின்னர் சென்னையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட இரவு 10.30 மணி அளவில் நெல்லைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் மிச்சமாகும் எனவும் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது வேகம் எடுத்து வரும் நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.