சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் தினந்தோறும் சுமார் 400 விரைவு ரயில்கள் செல்கிறது. இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில், விரைவு ரயில், மின்சார ரயில் என சுமார் 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் சென்று கொண்டே இருக்கும். இதனால அந்த வழித்தடம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கடந்த வருடம் சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் நடைமேடையை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து சென்றவர்களில் 274 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதில் 249 ஆண்கள் ரயிலில் அடிபட்டு  உயிரிழந்த நிலையில், 29 பெண்கள் ரயிலில் அடிபட்டு  உயிரிழந்துள்ளனர். மேலும் இதனால் உயிரிழப்புகளை தடுப்பதற்கு பயணிகள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவதோடு தண்டவாளத்தை கடந்து செல்லாமல் நடைமேடையை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.