இதய பிரச்சினை காரணமாக பாஜக பிரமுகர் கேடி ராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு திடீர் மூச்சு திறந்தால் ஏற்பட்டதாகவும் சென்னை அப்பல்லோவில் ஐஸ்வீர் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று ஓபன் ஹார்ட் சர்ஜரி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பாக இவர் தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.

இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள கேடி ராகவனை முதல்வர் மற்றும் எம் பி கனிமொழி ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து என்னதான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முதல்வரும் எம் பி யும் நேரில் வந்து விசாரித்தது மனிதாபிமானத்தின் உச்சம் என பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் கமாண்ட் செய்து வருகின்றனர்.