சென்னையில் 200 வார்டுகளிலும் மகளிருக்கென பிரத்தியேக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

2024 – 25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று  தொடங்கியது. 2024 – 25 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். ரிப்பன் மாளிகையில் மேயர் ப்ரியா பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மேயர் பிரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்ல ரூபாய் 45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் உளவியல் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில் பயிற்சி நிலையத்தை மேம்படுத்த புதிய பொருட்கள் வாங்க 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் 2 செட் சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 200 வார்டுகளிலும் மகளிருக்கென பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும். EMPOWER உடற்பயிற்சி கூடம் ரூபாய் 10 கோடி செலவில் 200 வார்டுகளிலும் அமைக்கப்படும். பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வாகனங்களை கொள்முதல் செய்ய 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த 7 கோடி ஒதுக்கீடுசெய்யப்படும்” என தெரிவித்தார்.