சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் நேற்று காலை 10.05 மணியளவில் அங்குள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் அனைவரும் பதறி அடித்து கட்டிடத்தை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னையில் நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வு எதுவும் ஏற்பட வில்லையாம். ஒருவேளை மக்கள் நில அதிர்வை உணர்ந்து இருந்தால் அது வேறு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

அதாவது நில அதிர்வு ஏற்பட்டதாக சொல்லப்படும் இடத்தை சுற்றி பூமியில் தோண்டுதல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் போன்ற ஏதாவது பணிகள் நடைபெற்றால்  நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் தான் நில அதிர்வு ஏற்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அதை முற்றிலும் மறுத்துள்ளது. அதாவது நில அதிர்வு ஏற்பட்டதாக சொல்லப்படும் இடத்தில் எந்த ஒரு மெட்ரோ ரயில் பணிகளும் நடைபெறவில்லை. மேலும் இதன் காரணமாக நில அதிர்வு எதனால் ஏற்பட்டது என்பது தற்போது புரியாத புதிதாகவே இருக்கிறது என்று கூறப்படுகிறது.