தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் செந்தில் பாலாஜி  அமைச்சர் பதவியில் நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும்  ஆளுநர் தெரிவித்த நிலையில் இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவை, நள்ளிரவு அவரே வாபஸ் பெற்றார். பதவி நீக்கத்துக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, செந்தில் பாலாஜி நீக்கம் பற்றி மத்திய அரசு தலைமை வழக்கறிஞரிடம் கருத்தை கேட்க முடிவு செய்துள்ளதாகவும், அவரது பதவி நீக்கம் வாபஸ் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது