பாமக தலைவர் ராமதாஸ், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். செந்தில் பாலாஜி தியாகி என கூறப்படுகிறாரெனில், பணத்தை கொடுத்து ஏமாந்தவர்களை துரோகிகளாகக் கருதவேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். தமிழக முதல்வர் நீதிபதியாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதுதானே தவிர, வழக்கறிஞராக செயல்படக்கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி வெளியே விடப்பட்டிருப்பது, விசாரணை முடிவடைவதற்கு நீண்ட காலம் ஆகும் என்பதால் தான் என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட பிணை சிறைவாசம் தியாகமல்ல எனவும் குறிப்பிட்டார்.

மேலும் 2014 ஆம் ஆண்டு, அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர்கள் தேர்வு தொடர்பான முறைகேடுகள் குறித்து ராமதாஸ் பேசினார். 1630 பணியாளர் பணியிடங்களுக்கு நடத்துனர் பதவிக்கு 1.75 லட்சம் மற்றும் பொறியாளர் பதவிக்கு 12 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாகக் கூறினார். இதனால் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது என்றும், 2016 தேர்தல் பரப்புரையிலும் மு.க.ஸ்டாலின் இவ்வாறு குற்றம் சாட்டினார்.

ராமதாஸ் மேலும், செந்தில் பாலாஜி மீது உள்ள குற்றச்சாட்டுகள் பலமாகும்  இருப்பதாகவும், அவர் லஞ்சமாக பெற்ற பணம் அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜி எந்த வகையிலும் தியாகம் செய்ததாக கருத முடியாது, மு.க.ஸ்டாலின் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றார். நீதியின் பக்கம் நிற்பவர் என்றால் உங்களிடம் உள்ள ஆதாரங்களை கொடுத்து செந்தில் பாலாஜிக்கு தண்டனை பெற்று கொடுத்திருக்க வேண்டும். எனவே தமிழ்நாட்டில் இந்த வழக்கு நடைபெற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம்  கிடைக்காது , எனவே வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றவேண்டும் என்றும் கூறியுள்ளார்.