
தமிழ்நாடு சூரிய மின்சக்தியில் புதிய சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று 5979 MW மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சாதனையான 5704 MW என்பதை தற்போது விஞ்சு உள்ளது. அது மட்டுமல்லாமல் 41.40 MU மின்சாரம் அதிகபட்சமாக மின் கட்டமைப்பில் உட்கொள்ளப்படுகின்றது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழகத்தின் முதன்மையை உறுதிப்படுத்துவதாக பதிவிட்டுள்ளது.