சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலத்தில் பூரணநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் மணலி குமரன் நகரச் சேர்ந்த 24 வயது இளம்பெண் திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த பூரணநாதன் இளம்பெண்ணின் உறவினர்களிடம் செல்போனில் பேசி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த இளம்பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் பூர்ணநாதன் இளம்பெண்ணிடம் சூரிய உதயத்தின் போது உன்னை பார்த்து பேச வேண்டும் என ஆசை வார்த்தைகள் கூறி அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இருவரும் பேசிக் கொண்டிருந்தபோதே பூரணநாதன் இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். அவரை இளம்பெண் தடுக்க முயன்றார். பின்னர் இளம் பெண்ணின் கழுத்தில் இருந்த 10 கிராம் தங்க சங்கிலியை கேட்டுள்ளார். அந்த பெண் அதற்கும் மறுப்பு தெரிவித்ததால் அவரது கன்னத்தில் அறைந்து செயினை பறித்து சென்றார். மேலும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பூரணநாதனை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.