தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் சமீபத்தில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி என்ற திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருப்பவர் மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்.

இவர் நடிகர் ரஜினிகாந்துக்கு  கோவில் கட்டி அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டு வந்தார். இந்த விவகாரம் நடிகர் ரஜினிகாந்துக்கு தெரிய வந்தது. உடனே அவர் தன்னுடைய ரசிகர் கார்த்திக் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சென்னையில் உள்ள தன்னுடைய இல்லத்திற்கு நேரில் அழைத்தார். மேலும் அவர்கள் அனைவரிடமும் நடிகர் ரஜினிகாந்த் பேசி மகிழ்ந்ததோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.