நாடு முழுவதும் புழக்கத்திலிருந்த மிக உயர்ந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டான 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மாற்றிக் கொள்ளவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இன்னுமும் நிறைய பேர் மாற்றாமல் இருக்கிறார்கள். வங்கி கிளைகளில் மாற்றுவது அல்லது டெபாசிட் செய்ய அனுமதித்த பிறகு ரிசர்வ் வங்கி பல வழிகளை வழங்கி இருக்கிறது . இதன் மூலமாக இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது  டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் சிரமம் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது . ஆன்லைனில் கிடைக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்திய அஞ்சல் துறையின் எந்த அலுவலகத்தின் மூலமாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அலுவலகத்திற்கு நோட்டுகளை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.