
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி இன் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கையானது தற்போதைக்கு ஓங்கி உள்ளது.
வில் யங், ரச்சின் ரவீந்தரா, கேன் வில்லியம்சன் மற்றும் லேதம் விக்கெட்டுகளை இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினார்கள். 23 ஓவர்களில் 108 ரன்கள் நியூசிலாந்து அணி எடுத்துள்ளது. பத்து ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்து ஒரே ஒரு பவுண்டரி உட்பட 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் ஜடேஜா. ஜடேஜாவின் ஓவர்கள் முடிந்த பிறகு அவரை விராட் கோலி அரவணைத்து பாராட்டியுள்ளார்.