தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து சீரும் சிறப்புமாக எந்த ஒரு பிழையும் இன்றி பாடப்பட்டுள்ளதாக அதிமுக தமிழக வெற்றி கழகத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் தாய் வாழ்த்து பாடலில்  திராவிட நல் திருநாளும் என்ற வார்த்தை விடப்பட்டது சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியது. அதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து உதயநிதி அவர்கள் கலந்து கொண்ட மற்றொரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் சில வார்த்தைகள் தவறாக பாடப்பட்டது.

இந்நிலையில் அதே சர்ச்சை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிலும் வெடிக்க கூடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், மிகவும் கம்பீரமாக சத்தமாக அழகிய குரலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்சிதமாக பாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில்,

அதிமுக அந்த வீடியோ காட்சிகளை தனது ஐடி விங் சமூக வலைதளங்களில் பகிர்ந்து டெக்னிக்கலி எந்த ஒரு குறையும் இல்லை என பகிர்ந்துள்ளது. அதிமுகவின் இந்த பதிவு பாஜக மற்றும் திமுகவிற்கு எதிராகவும் விஜய் அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் தெரிவிக்கும் வகையில் இருப்பதால் அதிமுக விஜய் அவர்களுடன் கூட்டணி அமைக்க கூடுமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.