
தமிழக அரசு தற்போது childline ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கோரிக்கைகள் எழுந்த நிலையில் ஒரு வருடம் தாமதமானது. இதைத்தொடர்ந்து தற்போது அரசாங்கம் ஊதியத்தை உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த ஊதிய உயர்வு 2024 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிர்வாகத்துறை ஊழியர்களின் சம்பளம் 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 45 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று ஐடி, சூப்பர்வைசர், கால் ஆப்ரேட்டர்ஸ், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர்களின் சம்பளமும் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.