19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிஐசி மகளிர் டி20 உலக கோப்பை மலேசியாவில் நடந்து வருகிறது. பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. சூப்பர் சிக்ஸ் சுற்றுப்போட்டியில் நடந்து வரும் நிலையில் இன்று குரூப்-1 பிரிவில் இடம் பெற்ற வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்டன.

கோலாலம்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு சமாளிக்க முடியாத வங்கதேச அணி 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது இதனைத் தொடர்ந்து 66 ரன்களை இலக்காக நிர்ணயித்து களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 66 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அடுத்ததாக 28ஆம் தேதி இந்திய அணி ஸ்காட்லாந்துடன் சூப்பர் சிக்ஸ் பிரிவில் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.