
கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager (Sales) பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணியிடத்திற்கான முழு விவரங்கள் பின்வருமாறு:
பணியிடம்: Relationship Manager (Sales)
ஊதியம்: மாதம் ரூ.30,000/-
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரியில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எந்தவொரு துறையில் பட்டம் பெற்றாலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், www.karurvysyabank.co.in என்ற கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.