மக்களவைத் தேர்தலை ஒட்டி வரும் 24ம் தேதி திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.

மக்களவைத் தேர்தலை ஒட்டி வரும் 24ம் தேதி திருச்சியில் மாலை 4 மணியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி இன்னும் இறுதியாகாத நிலையில் பிரச்சார பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி வரும் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இபிஎஸ் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி 24ஆம் தேதி திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியிலும், 26 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியிலும், இரவு 7:00 மணிக்கு நெல்லை வாகையடி முனையிலும் இபிஎஸ் பிரச்சாரம் செய்கிறார்.

27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவிலிலும், இரவு 7 மணிக்கு சங்கரன்கோவிலிலும் ஈபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 28ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிவகாசி பாவடி தோப்பு திடலிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை பகுதியிலும் பரப்பரை செய்கிறார்.

29 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மதுராந்தகத்திலும், இரவு 7 மணிக்கு பல்லாவரத்திலும் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 30ம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரியிலும், மாலை 6:00 மணிக்கு கடலூரிலும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

31 ஆம் தேதி மாலை 3:30 க்கு சிதம்பரம் பைபாஸ் பகுதியிலும், 5:30 மணிக்கு சின்னகடை தெரு மயிலாடுதுறை, இரவு 7:30 மணிக்கு தெற்கு வீதி திருவாரூரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.