வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் உதவிக்காக மத்தியபிரதேச அரசானது உதவி எண்ணை அறிவித்திருக்கிறது. சூடானில் சிக்கி இருக்கும் மத்தியபிரதேசம் மற்றும் இந்தியாவை சேர்ந்த குடிமக்களுக்கு உதவ மத்தியப்பிரதேச அரசு ஹெல்ப்லைனை துவங்கி உள்ளது.

சூடானில் சிக்கி தவிக்கும் மாநில மற்றும் வெளிமாநில குடிமக்கள் ஹெல்ப்லைன் எண்ணை (+917552555582) தொடர்பு கொள்ளலாம் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் சிக்கலை எதிர்கொள்ளும் மத்தியபிரதேசத்தில் வசிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முதல்வரின் ஹெல்ப்லைன் 181-ஐ அழைக்கலாம்.

தங்களது பிரச்சனைகளை (www.cmhelpline.mp.gov.in) என்ற முதல்வர் ஹெல்ப்லைன் போர்ட்டலில் சென்று புகாரளிக்கலாம். கடந்த சனிக்கிழமை அன்று தலைநகர் கர்டோமில் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இந்தியா உட்பட இதுவரை 400 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.