
விழுப்புரம் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார்(45)- சத்யா(40) தம்பதியினர். இவர்களுக்கு ஸ்ரீராம்(17) என்ற மகனும், அன்பிஸ்ரீ(15) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சதீஷ்குமார் குடும்பத்துடன் திரௌபதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று மீண்டும் பட்டுக்கோட்டைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலையில் தஞ்சாவூர் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த ஸ்ரீராம், சதீஷ்குமார் மற்றும் அன்பிஸ்ரீ மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஸ்ரீராம் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சதீஷ்குமாருக்கும், அவரது மகள் அன்பி ஸ்ரீ- க்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.