நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை அறிவித்த நிலையில் இன்று விஜய் ரசிகர்கள் மதுரை நகரில் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டி கவனம் ஈர்த்துள்ளனர். அதில் கழகங்கள் இனி கதறும், திலகங்கள் உனக்கு இட இனிமேல் வெற்றி என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் மதுரை கிழக்கு தொகுதி சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள், சும்மாவே விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பகீர் கிளப்புவாங்க இனி கேட்கவா வேண்டும், என பேசி வருகிறார்கள்.