ஒடிசா மாநிலம் மயூர் பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துனி  சிங் என்ற சிறுமி ஒருவர் உடல்நல  குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மறுநாள் குடும்பத்திடம் வழங்கப்பட்டது. அவருடைய உடலை தகனம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது சுரேந்தர் மோகன் சிங், நரேந்திர சிங் ஆகிய இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மற்றவர்கள் அந்த சுடுகாட்டை சுற்றி திரண்டு வந்துள்ளனர். மோகனும், நரேந்திரனும் உடலை எரிப்பதை கவனித்துக் கொண்டிருந்தார்கள். உடல் முழுவதுமாக எரிந்து கொண்டிருந்த பொழுது அதில் எரியாத ஒரு சதைப்பகுதியை அவர்கள் இருவரும் சிறு துண்டுகளாக வெட்டி மீண்டும் நெருப்பில் வீசி உள்ளார்கள்.

இதை கேட்டபோது அப்படி வீசினால் தான் நன்றாக எரியும் என்று பதில் அளித்துள்ளார்கள். பின்னர் அதில் இருந்து ஒரு துண்டை எடுத்து வைத்து மோகன் மறைத்து வைத்துள்ளார். பின்னர் பத்து நிமிடத்திற்கு பிறகு அந்த துண்டை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதில் ஒரு பகுதியை நரேந்திரனுக்கும் வழங்கி இருக்கிறார். இதை கண்ட ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே இதை செய்துள்ளார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.