
மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா. இந்த நகரத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காரில் பெண்களை அவமதிக்கும் நிலையில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தார். அதாவது Believe a snake not a girl என்ற வாசகம் அடைய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு அர்த்தம் சீறும் பாம்பை நம்பு. ஆனால்பெண்ணை நம்பாதே என்பதாகும். இந்த காரினை காவல்துறையினர் எதார்த்தமாக பார்த்துள்ளனர்.
அதன் பின் அந்த கார் உரிமையாளரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் அவரிடம் கூறி காரில் இருந்த ஸ்டிக்கரை அகற்றினர். இந்நிலையில் பொதுவெளியில் இது போன்ற வாசகங்களை பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவதோடு காவல்துறையினரை பாராட்டியும் வருகிறார்கள்.
— Kolkata Police (@KolkataPolice) July 27, 2024