தெலுங்கு சினிமாவில் படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் சீரியல்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இவர் தமிழில் ரோஜா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராமன் தொடரில் நடித்த நிலையில் அதிலிருந்து பாதியில் விலகினார்.

அதன்பிறகு நள தமயந்தி சீரியலில் பிரியங்கா நடித்த நிலையில் அந்த சீரியலில் அவர் இறந்தது போன்று காட்டப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு சீரியலில் இருந்து விலகிய பிரியங்கா ‌ மலேசியாவில் கணவருடன் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் பிரியங்கா ஹோட்டலில் பில் போடுவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.