தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில், அரசியலை  கடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்று தனது இருக்கையில் அமர்ந்திருந்தபோது, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்க மேடைக்கு வந்தார்.

அப்போது, அவையில் இருந்த மற்ற உறுப்பினர்கள் கவனிக்கும் முன்பே, முதலமைச்சர் விஜய் சட்டென்று எழுந்து நின்று, இருகரம் கூப்பி செங்கோட்டையனுக்கு மிகுந்த மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தார். ஒரு முதலமைச்சராக இருந்தபோதிலும், வயதில் மூத்த மற்றும் அரசியல் அனுபவம் மிக்க ஒரு தலைவருக்கு விஜய் காட்டிய இந்த உயரிய பண்பு, அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

“>

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், “அரசியல் நாகரிகம்னா இதுதான்” என நெட்டிசன்கள் விஜய்யைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.