அமெரிக்காவை சேர்ந்த கெல்லி டெட்போர்ட் என்ற பெண் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் உள்ள உணவுப் பொருட்கள் அருகே சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் உணவு பொருட்களில் சிறுநீரை கலந்து அதனை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் கெல்லி டெட்போர்ட் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் அந்த பெண் சிறுநீரால் அசுத்தம் செய்த உணவு பொருட்களை அப்புறப்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் அவரால் 1.25 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.