
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற நாடகத்தில் நாயகனாக வெற்றி வசந்த் நடித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்னி தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷ்ணவியை காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்று சென்னையில் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிச்சயதார்த்த விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். மேலும் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளது.