
இசைஞானி இளையராஜா தன்னுடைய முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துவிட்டு இன்று சென்னை திரும்பியுள்ளார் . இவருக்கு தமிழக அரசின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தார்கள். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து வரவேற்றார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய இளையராஜா, “லண்டனை தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இளையராஜா சிம்பொனி நான்கு மொமெண்ட்டுகளை கொண்டது. சிம்பொனி முடியும் வரை யாரும் கைதட்ட கூடாது என்பதுதான் விதிமுறை. ஆனால் ரசிகர்களும் பொதுமக்களும் சிம்பொனி முடிந்ததுமே உற்சாகமாக கைதட்ட தொடங்கினார்கள். ரசிகர்கள் உற்சாகத்தை மேடையில் இருந்து இசை கலைஞர்களை மிகவும் வியப்பாக பார்த்தார்கள் என்று கூறியுள்ளார்.