சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம். மேலும், UMANG என்ற செயலியின் மூலமும் முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.