மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தன்னைப் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதாவது 72 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிப்படி கட்சி பொறுப்புகளில் இருக்க முடியாது. அடுத்த மாதம் கே. பாலகிருஷ்ணனுக்கு 72 வயது ஆகிறது. இதனால் அவர் தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதால் அவரை விடுவித்துவிட்டு புதிய மாநில செயலாளராக சண்முகம் என்பவரை நியமித்துள்ளனர். இவர் பரவியேற்றவுடன் திமுகவின் வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை எனவும், அப்படி கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் எந்த ஒரு சூழ்நிலையிலும் கட்சி கொள்கைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் கூறினார். ஏற்கனவே கே. பாலகிருஷ்ணன் போராட்டங்களை தடுத்து நிறுத்துவதாகவும் தமிழ்நாட்டில் செயல்படுத்தாத அவசர நிலையை திமுக செயல் படுத்தி உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். அவருக்கு முரசொலி நாளிதழ் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனால் சிபிஎம் மற்றும் திமுக இடையே சற்று மோதல் போக்கு நிலவுகிறது. இந்த நிலையில் புதிய மாநில செயலாளராக பொறுப்பேற்றுள்ள சண்முகத்திற்கு முதல் ஆளாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தோழர் திரு பெ. சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பொதுவுடமை பாதையில் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த போற்றுதலுக்குரிய தங்களின் பணி இனிவரும் காலங்களிலும் தொடரட்டும் என்று கூறியுள்ளார்.