நடிகை சிம்ரன், பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டு வந்ததற்கான தன் அனுபவத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். சிறு வயது முதலே அவ்விதமான சீண்டல்களை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது மிகுந்த வேதனையைக் கொடுத்ததாகவும், அந்த சம்பவங்களை தற்போது என்னால் பகிர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

சினிமா துறையில் உள்ள நடிகைகள், தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்தி வரும் சூழலில், அவர்களது மனவலிமை பற்றி சிம்ரன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விதமான அநீதி சம்பவங்களை பொறுத்துக்கொள்ளாமல் அதற்கு எதிராக போராட வேண்டும் எனவும் , அமைதி காக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.