ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34 வது லீக் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. இதனால் 8 விக்கெட் வித்யாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு சென்னை அணியின் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன்  ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம் அளித்தார்.

அவர் பேசியதாவது, இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பான முறையில் செயல்பட்டோம். இதற்கு மேல் சிறப்பாக செயல்படும்படி எங்கள் வீரர்களிடம் கேட்க முடியாது. பவர் பிளேவிற்கு பிறகு நல்ல துவக்கம் கிடைத்தது. இருப்பினும் மிடில் ஓவர்களில் சீரான விக்கெட் இழப்பு ஏற்பட்டது. இதனால் எங்களால் அதிக ரன்களை குவிக்க முடியவில்லை. போட்டிக்கு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருக்கிறது. இதனால் எப்போதுமே 20 ரன்கள் வரை கூடுதலாக தேவை. அதன் அடிப்படையில் நாங்கள் 190 ரன்கள் வரை எடுத்திருந்தால் வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பு இருந்ததாக நினைக்கிறேன். இருப்பினும் நாங்கள் அடுத்த போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் அவர்களை எதிர்கொள்ள காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.