இந்தியாவில் போக்குவரத்து விதிகளை பலரும் சரியாக பின்பற்றாததால் அதிகளவு விபத்துக்கள் நடைபெறுகிறது. அதன்படி சாலை விபத்துக்கள் தொடர்பாக சேவ் லைப் பவுண்டேஷன் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சாலை விபத்தில் அதிகமாக சிறுவர்கள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின்படி சிறுவர்கள் சாலை விபத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் தமிழகத்தில் சுமார் 1153 சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், 2388 சிறுவர்கள் மரணம் அடைந்து உத்திரபிரதேசம் மாநிலம் முதலிடத்திலும் இருந்து வருகிறது. தினந்தோறும் நிகழும் சாலை விபத்துகளில் சுமார் 40 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் 2021 ஆம் ஆண்டு நடந்த சுமார் 4.23 லட்சம் சாலை விபத்துகளில் 9.6 சதவீதம் விபத்துக்கள் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்துள்ளதாகவும் தேசிய காப்பகம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது