வயதான காலத்தில் அனைவருமே நிதி நெருக்கடி இல்லாமல் வாழ ஆசைப்படுவார்கள் . அதற்கு சரியான திட்டமிடுதல் வேண்டும். ஓய்வு காலத்தில் பென்ஷன் அல்லது வேறு விதமாக ஏதேனும் நிதி பாதுகாப்பு இருந்தால் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். அதற்காக பலரும் தங்களுடைய இளமைக் காலத்திலேயே முதலீடு செய்ய தொடங்குவார்கள். அதன் பிறகு குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர் தங்களுடைய பணத்தை மூத்த குடிம க்கள் சேமிக்க தொடங்குவார்கள். இது அவர்களுடைய கடைசி காலத்தில் கைகொடுக்கும். இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்காகவே தொடங்கப்பட்ட திட்டம் .

இந்த திட்டத்தில் தற்போது விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தில் முதலீடு செய்ய கணக்கை தொடங்க வேண்டும். சில சமயங்களில் ஒரு வருடத்திற்குள் கணக்கை மூட வேண்டி இருக்கும். உங்களுக்கும் இதுபோல் ஏதாவது நடந்தால் முதிர்வுக்கு முன் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள் இப்பொழுது மாறிவிட்டது. அந்த புதிய மாற்றத்தின் படி கணக்கு தொடங்கி ஒரு வருடத்திற்குள் மூடப்பட்டால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் ஒரு சதவீதம் கழிக்கப்பட்டு பணம் திருப்பி தரப்படும். இரண்டு மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்து ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு கணக்கு மூடினால் அந்த தொகை மாதங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருப்பி கொடுக்கப்படும். அதே சமயம் அதில் பெறப்பட்ட வட்டியின் பலனும் கிடைக்கும்.