சாம்பியன்ஸ் டிராபியின் முதல் லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது லீக் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்கும் பட்சத்தில் அரையிறுக்கு முன்னேற முடியாது. இதனால் ஞாயிறன்று நடைபெறும் இந்தியா -பாகிஸ்தான் லீக் போட்டியானது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சோயிப் மாலிக், அக்தர் ஆகியோர் இந்த போட்டியில் எந்த அணி வெல்லும்? என்பது குறித்து பேசி உள்ளார்கள்.

இது குறித்து பேசிய சோயிப் மாலிக், “பாகிஸ்தான் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அணியில் இருக்கும் வீரர்களுக்கு நம்பிக்கை குறைவாக இருக்கிறது. அதே நேரத்தில் அவர்களுக்கு புத்துணர்ச்சி அதிகமாக இருக்கிறது. சீனியர் வீரர்கள் முன் நின்று ஆட்டத்தை வழி நடத்த வேண்டும். இது வாழ்வா? சாவா? போட்டி தான்.இந்தியாவை வீழ்த்தி ஆட்ட நாயகன்  வாங்கும் வீரர் பாகிஸ்தானில் பெரிய வீரராக மாறுவார். அவரை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இந்த காரணத்திற்காகவே அனைத்து வீரர்களும் மிக கடுமையாக போராடுவார்கள். ஆக்ரோஷமாக விளையாட வேண்டும்.  அப்படி விளையாடவில்லை என்றால் பின்னடைவு தான் ஏற்படும் என்று கூறியுள்ளார். அடுத்ததாக பேசிய அக்தர், “நியூஸிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக விளையாடவில்லை. மிகவும் கவலையாக இருந்தது. வாழ்வா? சாவா போட்டி என்பதை பாகிஸ்தான் அணி உணர்ந்தால் இந்திய அணியை நிச்சயம் வீழ்த்த முடியும். சரியாக சிறப்பாக இருந்தாலே போதும். அது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.