
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் கண்டிப்பாக செல்லாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகுவதோடு அந்த போட்டியை தாங்கள் நடத்தவில்லை எனவும் ஐசிசி இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதாவது இந்திய அணி கலந்து கொள்ளும் போட்டியை மட்டும் துபாய் அல்லது வேறு ஏதாவது நாட்டில் வைக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்புகளை தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் ஒருவேளை பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று இந்தியா விளையாடவில்லை எனில் சாம்பியன் டிராபி தொடரிலிருந்து விலகுவதோடு, போட்டியை நடத்த மாட்டோம் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.