ஓபன் ஏஐ நிறுவனமானது கடந்த வருடம் இறுதியில் சாட்ஜிபிடியை களமிறக்கியது. கூகுள் சேர்ச் என்ஜினுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாட்ஜிபிடி மக்களிடையே வரவேற்பை பெற்றது. மக்கள் தேடும் முடிவுகளுக்கு நொடியில் பல தகவல்களை வாரிக்கொண்டு வந்து கொடுத்ததால் சாட்ஜிபிடியை அதிகம் பயன்படுத்த துவங்கினர். அதே நேரம் இது கூகுள் நிறுவனத்திற்கு தலைவலியாக மாறியது. உடனே சாட்ஜிபிடிக்கு போட்டியாக அதேபோன்று ஒரு  தொழில்நுட்பத்தை உருவாக்க கூகுள் குழு அமைத்தது. இது தொடர்பாக பேசிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனமும் கூகுள் பார்ட் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். எனினும் எப்போது வெளியிடப்படும் எனும் அறிவிப்பு வெளியாகவில்லை.

கூகுள் Bard பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்வோம்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கூகுள் I/O-வில் புது தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவிப்புகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. மொத்தம் 25 அறிவிப்புகள் அதில் வெளியிடப்பட்டது. அதில் ஒன்றுதான் கூகுள் பார்ட். இந்தியா உள்ளிட்ட 18-0க்கும் மேற்பட்ட நாடுகளில் களமிறக்கப்பட்டு இருக்கும் கூகுள் பார்ட்-ஐ கூகுளின் சேர்ச் பாக்ஸில் சென்று bard.google.com என்று டைப் செய்தால் அந்த பக்கம் திறக்கும். பின் Try Bard ஆப்ஷனைக் கிளிக் செய்து அதன் பிரைவசி பாலிசியை ஏற்கவும். அடுத்து பார்ட்-ஐ பயன்படுத்தலாம்.

அதோடு சாட்பாட்டை ஆராயலாம். கூகுள் பார்ட்-ஐ யூசர்கள் பல மொழிகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும். சாட்ஜிபிடியில் இதற்குரிய வாய்ப்பு மிக குறைவாகவுள்ளது. அதும்சாட்டுமின்றி இணைய வசதி மற்றும் லேட்டஸ்ட் தகவல்கள் இதில் இடம்பெறாது. எனினும் கூகுள் பார்ட் தற்போதைய தகவல்கள் வரை அனைத்தையும் கொடுக்கும். அந்த அளவிற்கு மேம்படுத்தப்பட்ட அம்சமாக வந்திருப்பதால் சாட்ஜிபிடி வாடிக்கையாளர்கள் கூகுள் பார்ட் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இது சாட்ஜிபிடிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது.