அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரக்குடி பேருந்து நிறுத்தம் அருகே செடி, கொடிகள் இருக்கும் இடத்திலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதி மக்கள் துர்நாற்றம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது கட்டப்பட்ட நிலையில் இருந்த சாக்கு முட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. இதனால் யாரையாவது கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி வீசி சென்றார்களா? என சந்தேகம் அடைந்து பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாக்கு முட்டையை பிரித்து பார்த்தபோது இறந்த நாயின் உடலை சாக்கு முட்டையில் கட்டி வீசியது தெரியவந்தது. இதுபோன்று இறந்த செல்ல பிராணிகளின் உடலை சாக்கு முட்டையில் கட்டி வீசக்கூடாது என பொதுமக்கள் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்போகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.