
இளம்வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போஸ் கொடுத்த விதத்தை பார்த்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இந்த ஐபிஎல் சீசனில் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து தனது அபாரமான ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இந்நிலையில் தற்போது யஷஸ்வி தொடர்பான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி சீனா சென்றது தெரிந்ததே. இந்நிலையில் ரிங்கு சிங் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர்களின் குழுவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், சாய் கிஷோர், அர்ஷ்தீப் சிங், ஷாபாஸ் அகமது, ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். ஆனால் அதில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் போஸ் (தொடையை காட்டியபடி) அனைவரையும் கவர்ந்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து விளையாட்டு ரசிகர்கள் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ‘யசஸ்வி என்ன ஒரு போஸ்.. ரொம்ப அழகா இருக்கு’.. ‘இப்போது புரிகிறது நீங்கள் யாரை இன்ஸ்பிரேஷன் எடுத்தீர்கள்..? ‘ என்று பாலிவுட் நடிகர் சல்மான் கானின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் தங்களுக்குரிய பாணியில் மீம்ஸ் உருவாக்கி பதிவிட்டனர். மேலும் பலரும் பலவிதமாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
https://twitter.com/GurtejSinghGre6/status/1707710259358269758
Yashasvi Jaiswal 😭 pic.twitter.com/nFUjjtHe7T
— Desi Bhayo (@desi_bhayo88) September 29, 2023
Now we all know who inspired yashasvi jaiswal pic.twitter.com/oGruHydSmL
— Deepak Kumaar (@immunewolf_) September 29, 2023
https://twitter.com/iamhimanshu83/status/1708057732551696728