
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் தனுஷை இயக்கி நடிக்கும் நிலையில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். அதன்பிறகு இந்த படத்தை விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் தயாரித்து வருகிறார். இவர் dawn pictures என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு இன்று திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் இருவரும் அருவருகே அமர்ந்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. அதன்பிறகு சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி நடிகை நயன்தாராவுடன் திருமண நிகழ்ச்சியின் போது ஒன்றாக அமர்ந்து பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது. மேலும் ந தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் ஒரே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருகருகே அமரந்துள்ளது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.
#Dhanush & #Nayanthara together at the recent wedding of Producer AakashBaskaran pic.twitter.com/ulZDckjak8
— AmuthaBharathi (@CinemaWithAB) November 21, 2024