
திருவள்ளூர் மாவட்டம் செத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் ரம்யாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரம்யா சமையல் வேலை செய்யாமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதனைப் பார்த்த வெங்கட்டின் தாய் வள்ளி தனது மருமகளை கண்டித்தார். இதனால் கோபமடைந்த ரம்யா தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரம்யாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.