உத்தர பிரதேசம் மாநிலம் காஸ்கஞ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி பிரஜ்பாலா. இவர் ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று பாலா தனது கணவருக்காக ஆசை ஆசையாக உணவு சமைத்து வைத்து காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ராமு உணவை சாப்பிட்டுவிட்டு உப்பு சரியாக இல்லை எனக் கூறி மனைவியை சரமாரியாக தாக்கினார்.

இதனால் மாடியில் இருந்து கீழே உருண்டு விழுந்து படுகாயமடைந்த பாலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பாலா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் பாலாவின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் ராமுவுக்கும் அவரது உறவுக்காக பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து கேட்டபோது பாலாவுக்கும் ராமுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட கோபத்திலேயே ராமு பாலாவை கொலை செய்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராமுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.