நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கிறார். இதற்கிடையில் சமந்தா மையோ சிட்டிஸ் எனும் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

அதன் பிறகு நோயிலிருந்து குணமடைந்து மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் சிட்டாடல் ஹனி பனி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மும்பையில் தான் செட்டில் ஆகி இருக்கிறார் சமந்தா. இடையிடையே அவர் அவ்வப்போது ஜிம் வீடியோக்கள், தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. அதில் தடைகளை உடைத்து தங்களோட வாழ்க்கையை மாற்றி அமைத்து நினைத்தபடி ஒரு மாஸ்டர் பீஸாக உருவாகியுள்ள பெண்கள் தங்களுடைய கதைகளை சொல்லுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து  எக்கச்சக்கமான பெண்கள் தங்களை ஸ்டோரியை எழுதியுள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)