ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்த அணி இறுதியில் 19.3 ஓவர்களில் 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்கள் எடுத்த நிலையில் அவர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

இதனையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டில் 164 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 58 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 51 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா  தேர்வாகியுள்ளது. மேலும் வெளியேற்றுதல் சுற்றில்  ஹைதராபாத் அணி மற்றொரு அணியுடன் மோதும் என்பதால் அதில் வெற்றி பெற்றால் ஹைதராபாத் அணிக்கும் இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.